அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது.
போக்குவரத்துறையில் வேலைக்கு பணம் பெற்ற வழக்கில், கடந்த செப்டம்பர் 26ம் தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் உத்தரவால் இந்த வழக்கின் சாட்சிகள் பயப்படுவார்கள், வழக்கு விசாரணைக்கு தடை ஏற்படும் எனவும் ஜாமின் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரி பாலாஜி என்பவர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய எந்த அடிப்படை முகாந்திரத்தையும் காண முடியவில்லை என தெரிவித்தது.
மேலும் ஏற்கனவே ஜாமினை ரத்து செய்யக்கோரிய கோரிக்கையுடன் ஒரு இடையீட்டு மனு மீதான விசாரணை இந்த அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. அதனடிப்படையில் ஒய்.பாலாஜியின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டார்.
.
- First Published :