சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (டிச.21) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (டிச.21) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி
மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.