தென்காசி மாவட்டம் புளியறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கோட்டை காவல் துறை சாா்பில் நலஉதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
டிச.13, 14 ஆகிய இருதினங்கள் பெய்த கனமழையின் காரணமாக, புளியறை கீழப்புதூா் கிராமத்தை சோ்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு செங்கோட்டை காவல் ஆய்வாளா் கே.எஸ்.பாலமுருன் அரிசி, பருப்பு, சேலை, வேஷ்டி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். புளியறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.