ஜெய்ப்பூரில் காஸ் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!

By
On:
Follow Us

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் நேற்று (20ம் தேதி) காலை டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் இருந்து தலைநகரான ஜெய்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அஜ்மீர் – ஜெய்பூர் சாலையில், பான்க்ரோட்டா பகுதி அருகே சாலை வளைவில் இந்த லாரி சென்றபோது எதிர்பாராதவிதமாக மற்றோரு சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் லாரியினுள் நிரப்பப்பட்டிருந்த சமையல் காஸ் பீறிட்டு வெளியேறியது. இதனால், அந்தப் பகுதி முழுக்க பனிப்படலம் போர்த்தியதுபோல் இருந்திருக்கிறது. சில வினாடிகளில் எல்லாம் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால், அந்தச் சாலையில் சென்றுக்கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீப்பற்றி எரியத்துவங்கியுள்ளது.

விளம்பரம்

விபத்து ஏற்பட்டு தீ பரவத் துவங்கியதும், வாகனத்தில் இருந்தவர்கள் வெளியேறி தப்பியுள்ளனர். மேலும், விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும், இந்த விபத்தில் தற்போதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 80 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதில், 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை பராமரிக்க 5 எளிய குறிப்புகள்.!


குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை பராமரிக்க 5 எளிய குறிப்புகள்.!

பலியானவர்கள் குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements