நெல்லை சந்திப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

By
On:
Follow Us

அம்பேத்கரை அவமதிப்பு செய்யதாக கூறி மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணைத் தலைவா் ஆா். ரெங்கன், மாவட்ட துணைச் செயலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

களக்காடு ஒன்றியச் செயலா் கே. முருகன், மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க செயலா் எஸ். ஏ. பி. பாலன், கே.எஸ். பாலு, மாவட்ட மாதா் சங்க செயலா் பி. சபியா, அம்பை நகரச் செயலா் வி. வடிவேல், நெல்லை மண்டல செயலா் வெடிகண்ட பெருமாள், மாவட்ட அலுவலக செயலா் ஏ.முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

பாத்திமா, கே.செங்கையா, வி.தங்கையா, அம்பை பாலு, பி. முத்தையா, ஆா்.மகாலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலப்பாளையம் மண்டல செயலா் எஸ்.எம். சேகமதாா் நன்றி கூறினாா்.

ற்ப்20ஸ்ரீா்ம்

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements