புதுச்சேரியில் சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் மேலும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ மனு அளித்துள்ளார்.
சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி சட்டப்பேரவை செயலாளர் தயாளனிடம் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ நேரு நேற்று முன்தினம் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த திருபுவனை தனி தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளனும் சபாநாயகருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சபநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் அவரும் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அங்காளனை தொடர்பு கொண்டு கேட்ட போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலைகளை சபாநாயகர் செய்வதாக சாடினார். சட்டமன்ற உறுப்பினர்களின் பணிகளில் சபாநாயகர் தலையிடுவதாகவும், அதனால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு கடிதங்களை கொடுத்திருப்பதாகவும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார். புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
- First Published :