சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்’ தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவனத்தின் Legal Head தாமினி.
“பெண்களுக்கு சொத்துக்களில் எந்த அளவிற்கு உரிமை இருக்கிறது? அதை பற்றி சட்டம் சொல்வது என்ன? ”
“சொத்துக்களில் ஆண்களுக்கு நிகரான பங்கீடு என்பது பெண்களுக்கும் உண்டு. அதில் அது எந்த வகையான சொத்து என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒரு அப்பா சுயமாக சம்பாதித்த சொத்திற்கும், பூர்வீக சொத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தாக இருக்கும் பட்சத்தில் அதில் யாருக்கு எவ்வளவு பங்கீடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அந்த தந்தைக்கு உண்டு. ஏனென்றால் அது அவர் சுயமாக சம்பாதித்து வாங்கிய சொத்து. அதில் முழுவதுமாக மகனுக்கு கொடுக்க வேண்டுமா அல்லது முழுவதுமாக மகளுக்கு கொடுக்க வேண்டுமா என முடிவெடுத்து அவர் ஒரு உயில் மூலமாகவோ, ஒரு செட்டில்மெண்ட் மூலமாகவோ அவர் கொடுக்க முடியும். இப்படி செய்யும் பொழுது அதில் அந்த மகனாளோ அல்லது மகளாளோ இது தவறு இதில் எனக்கு பாகம் வேண்டும் என கேட்க முடியாது. ஏனென்றால் அது தந்தையின் சுயமாக சம்பாதித்த வாங்கிய சொத்து அதில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு.
இதுவே பூர்விக சொத்தாக இருந்தால், அதாவது தாத்தாவின் சொத்து, தாத்தாக்கு தாத்தா சொத்து என இருந்தால் அது யாருக்கும் பிரித்து தராமல் இருக்கும் பட்சத்தில் அதில் ஆணுக்கு நிகரான உரிமை ஒரு பெண்ணிற்கும் அந்த சொத்து உரிமை உண்டு. ஒரு சொத்து யாருக்குமே எழுதி தரவில்லை என்றால் அந்த சொத்தில் வாரிசு அடிப்படையில் பிரித்து தரப்படுகிறது. வாரிசு சான்றிதழில் உள்ளவர்களுக்கு இந்த சொத்து சமமாக பிரித்து உரிமை தரப்படுகிறது. ”
சொத்து சார்ந்த சட்ட பிரச்னை இருக்கிறதா? Legal Opinion தேவையா? இந்த Link-ஐ க்ளிக் செய்யுங்கள்
https://www.vikatan.com/vikatan-zolvit?utm_source=vikatan
இது தொடர்பான முழுமையான விளக்கம் கீளே உள்ள வீடியோவில்..!