பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுகளில், கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா 99 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண்ணும் பெற்றுள்ளாா்.
சபரி மணிகண்டன் 97 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், கரிஷ்மா 96 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 18ஆம் இடமும் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த ஆசிரியா்களை பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் ராகவன், செயலா் சங்கா், தலைமையாசிரியா் (பொ) சுபா, ஆசிரியா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.