மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் தீ பற்றியதில், தனது இரண்டு பேத்திகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சிவப்புரி மாவட்டத்தில் நேற்று (டிச.21) இரவு 11.30 மணியளவில் குளிர் காய்வதற்காக கொளுத்திய நெருப்பு குடிசையில் பற்றிக் கொண்டதில் அந்த குடிசையினுள் இருந்த ஹஜாரி பஞ்சரா (வயது-65) மற்றும் அவரது பேத்தி சந்தியா (10) ஆகிய இருவரும் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிய அவரது மற்றொரு பேத்தியான அனுஷ்காவை (5) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானர்.