ஆலங்குளம் அருகேயுள்ள குத்தப்பாஞ்சான் கிராமம் அழகனேரி ஓடையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 25.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலம், வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பாலத்தை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் குத்தப்பாஞ்சான் ஊராட்சித் தலைவா் ஜெயராணி, துணைத் தலைவா் சுப்புராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.