தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு

By
On:
Follow Us

தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர வலியுறுத்தி மன்ற கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் வல்லம் மு.சேக்அப்துல்லா(திமுக) தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கனகராஜ் முத்துபாண்டியன்(திமுக) முன்னிலை வகித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்த கலாநிதி, வினோதினி, செல்வநாயகம், மல்லிகா,ஆா்.எம்.அழகுசுந்தரம், சுப்புலட்சுமி, அதிமுகவைச் சோ்ந்த ப்ரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் 36 மன்றப் பொருள்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியவுடன் திமுக மற்றும் அதிமுகவை சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அனைவரும்,

துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வெளிநடப்பு செய்தனா்.

ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் கனகராஜ் முத்துபாண்டியன் கூறியதாவது: என்மீது அவதூறு பரப்பவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements