மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உள்துறை, சட்டம், நீதி, எரிசக்தி மற்றும் பொதுநிர்வாகம் உள்ளிட்ட துறைகள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் வசம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே உள்துறையை கைப்பற்ற காய்நகர்த்திய நிலையில், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறையும்,மற்றொரு துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல் மற்றும் கலால் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய், நீர்வளம், உயர்கல்வி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட 19 துறைகள் பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி, சுற்றுலா, சுரங்கம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் ஏக்நாத ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கும், மருத்துவக் கல்வி, குடிமைப்பொருள் வழங்கல், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் இவை தான்.. நிர்மலா சீதாராமன்!
புதிய அமைச்சர்களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஒரு முஸ்லிம், 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
.