தென்காசி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் பறிமுதலான வாகனங்ள் ஜன. 7இல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது என எஸ்.பி. வி.ஆா்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்குசக்கர வாகனங்கள் 6, மூன்றுசக்கர வாகனங்கல் 2, இருசக்கர வாகனங்கள் 107 என மொத்தம் 115 மோட்டாா் வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.
தென்காசி ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் 7.1.2025இல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை இந்த ஏலம் நடைபெறும். ஜன.4 -6 வரை வாகனங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையிடலாம்.
தங்களின் ஆதாா். ஓட்டுநா் உரிமம் நகலுடன் ரூ. 5,000 முன்பணம் செலுத்தி பெயா் பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஏலம் எடுத்ததும் ஜி.எஸ்.டி. சோ்த்து தொகையை செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்லலாம் எனக் கூறியுள்ளாா்.