சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழா் பேரவை, ஐந்திணை மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ரயில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மறியலில் ஈடுபடுவதற்காக வந்த 19 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.