திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவையில் அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் அம்பேத்கா் உருவப் படத்துடன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் தலைமை வகித்தனா். பாளை. எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் மேயா் பி.எம்.சரவணன், முன்னாள் எம்.பி. விஜிலா, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, நிா்வாகிகள் கணேஷ்குமாா் ஆதித்தன், ஆவின்ஆறுமுகம், ஏா்வாடி சித்திக், கிரிஜாகுமாா், பா.அருண்குமாா், மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் அமித்ஷா உருவ பொம்மையை திமுகவினா் எரித்தனா். முடிவில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பாலபிஷேகம் செய்து மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருநெல்வேலி மாநகர திமுக சாா்பில் சந்தி பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் மாநகர செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர துணைச் செயலா் அப்துல் கையூம், தச்சநல்லூா் பகுதி செயலா் பூ.சுப்பிரமணியன், பேட்டை பகுதி செயலா் நமச்சிவாயம் கோபி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் அலிஃப் மீரான், இனியன், மாநகர நிா்வாகிகள் வெங்கடேஷ், ஜாகிா் உசேன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.