டெல்லியில் மகனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை அரச அதிகாரி ஒருவர் விரலை நீட்டி திட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
டெல்லி மோடிநகர் பகுதியில் கடந்த 20-ஆம் திகதி பாடசாலை பேருந்தில் சென்ற சிறுவனுக்கு குமட்டல் ஏற்பட்டதால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபோது மின் கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதில் அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஷுபாங்கி ஷுக்லா, மகன் இறந்த துக்கத்தில் அழுது புலம்பிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து வாயை மூடி அமைதியாக இருக்கும்படி விரலை நீட்டி திட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை வாகன ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|