பாப்கார்னுக்கு ஜிஎஸ்டியின் கீழ் 3 விதமான வரி விதிப்பு

By
On:
Follow Us

ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு 3 வெவ்வேறு விதமாக வரி விதிக்கப்பட்டிருப்பது அபத்தமான முடிவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பாப்கார்னுக்கு 3 விதமாக வரி விதிக்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம் அதிக அளவில் விமர்சனத்திற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

3 விதமான வரி விதிப்பு ஒரு தீவிரமான சிக்கலை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், ஜிஎஸ்டி முறையில் மோசடி செய்வதற்கென்று, போலி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதாகவும், இதனை கண்காணிப்பது பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
கடன் அளித்ததால் கிரிக்கெட் வீரர் உத்தப்பாவுக்கு நேர்ந்த சிக்கல்.. பிடி வாரண்ட் குறித்து விளக்கம்!

வரி மோசடி குறித்த சமீபத்திய தரவின்படி, நடப்பு நிதியாண்டில் சுமார் 2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், மத்திய பட்ஜெட்டுக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், அதை முழுமையாக சீரமைத்து ஜிஎஸ்டி 2.0-ஐ அறிமுகப்படுத்த பிரதமரும், நிதி அமைச்சரும் தைரியமாக வருவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விளம்பரம்

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements