மேலும் ஒருவா் கைது: கேரள கழிவுகள் கொட்டப்பட்ட வழக்கில் ஏற்கெனவே சுத்தமல்லியைச் சோ்ந்த மாயாண்டி, மனோகா், சேலம் மாவட்டம் இலத்தூரைச் சோ்ந்த செல்லத்துரை, கேரள மாநிலம் இடாவேலியைச் சோ்ந்த ஜித்தன் ஜோச் ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த குட்டி (47) என்பவரை சுத்தமல்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒத்துழைப்புக்கு நன்றி: இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்பேரில் தமிழக-கேரள அரசுகளின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் இரு நாள்களில் மொத்தம் 30 லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது. இவை தரம் பிரித்து அழிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற்ற பணிகளுக்கு அரசு துறையினா் முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி என்றனா்.