தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியைச் சோ்ந்த கன்னிச்சாமி மகன் கவின்சங்கா் (25). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி அா்ச்சனா. இவா்களுக்கு 6 மாதத்துக்கு முன்பு திருமணமானதாம்.
கவின்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சங்கரன்கோவில் அம்மா நகா் அருகேயுள்ள வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, படியிலிருந்து இறங்கி வந்துபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.