வழி மாறிய வந்தே பாரத்..? அகிலேஷ் சொன்ன குற்றச்சாட்டும்.. இரயில்வேயின் மறுப்பும்

By
On:
Follow Us

Last Updated:

மும்பையில் இருந்து திவா வழியாக கோவா செல்ல வேண்டிய வந்தே பாரத் ரயில் கல்யாண் ரயில் நிலையம் வழியாக மாறி கோவா சென்றது.

News18

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து கோவாவின் மட்கான் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த திங்கள்கிழமை மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால், 90 நிமிடங்கள் அதாவது 1.30 மணி நேரம் கால தாமதமாக கோவாவின் மட்கான் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதற்கு உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், வந்தே பாரத் ரயில் பாதை மாறி வேறு பாதையில் சென்றதாக என்று குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மும்பையின் மத்திய ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளர் விசாரித்தார். அந்த விசாரணையின் அடிப்படையில் பதிலளித்த இந்திய ரயில்வேயின் மும்பை பிரிவு, அகிலேஷ் யாதவின் தகவல் “உண்மையில் தவறானது” என்று பதிலளித்துள்ளது.

உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், “வந்தே பாரத் ரயில் தனது பாதையை தவறவிட்டுவிட்டது. கோவா செல்ல வேண்டிய ரயில் கல்யாண் ரயில் நிலையத்தோடு பயணத்தை முடித்துக்கொண்டது” என்று தெரிவித்தார். மேலும், மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக அரசு இருப்பதை விமர்சிக்கும் வகையில், இது இரட்டை இஞ்சின் அரசுக்கு பதிலாக இரட்டை தவறு அரசு என குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து மும்பையின் மத்திய ரயில்வேயின் கோட்ட ரயில்வே மேலாளர் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில், “பாதையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக ரயில் திருப்பி விடப்பட்டது. ரயில் திட்டமிட்டபடி மும்பை, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் இருந்து புறப்பட்டது. அதேபோல், அந்த ரயில் மட்கானை அடைந்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தபோது, மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள திவா ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில் அதன் அசல் போக்கிலிருந்து விலகியதாக தெரிவித்தனர். திவா-பன்வெல் ரயில் பாதையில் உள்ள பன்வெல் நிலையத்திற்குச் செல்லும் அசல் வழித்தடத்திற்குப் பதிலாக விரைவு ரயில் கல்யாண் வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements