Last Updated:
இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டருக்கு மிகாமலும், நீளம் 40 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 20 சென்டி மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமானத்தில் செல்பவர்கள், 7 கிலோவிற்கு குறைவான, ஒரு பையை மட்டுமே தங்களுடன் கையில் கொண்டு செல்ல வேண்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து லக்கேஜிற்கான விதிகளை திருத்தியுள்ளன.
அதன்படி, எகானமி வகுப்பில் பயணம் செய்பவர்கள் தங்களுடன் அதிகபட்சம் 7 கிலோ எடையிலான ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸில் பயணம் செய்பவர்கள் அதிகபட்சம் 10 கிலோ எடையிலான பையை தங்களுடன் கொண்டு செல்ல முடியும்.
Also Read | ரூ.22,000 கோடியில் திட்டம்..! மதுரை, கோவை மக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் சொன்ன குட் நியூஸ்
இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டருக்கு மிகாமலும், நீளம் 40 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 20 சென்டி மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மே 2 ஆம் தேதிக்கு முன்பு, முன்பதிவு செய்த பயணிகளுக்கு பழைய லக்கேஜ் விதிகளே பொருந்தும் என்றும் மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 7 கிலோவிற்கு அதிகமான பைகளை, கண்டிப்பாக லக்கேஜ் பிரிவிற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 25, 2024 9:09 AM IST
விமான பயணிகள் கவனத்திற்கு.. விதிகளை திருத்திய மத்திய அமைச்சகம்: இந்த புதிய கட்டுப்பாடுகள் தெரியுமா?