Last Updated:
மேலும், மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பிகாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கேரளா, ஒடிசா உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஒடிசா ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லாவை நியமித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒடிசா ஆளுநராக இருந்த ரகுபர்தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு கம்பம்பட்டி, ஒடிசா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பிகாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரளாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள், பொறுப்பேற்கும் நாளிலிருந்து தொடங்கும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
December 25, 2024 6:43 AM IST