தோல்விகளுக்கு காரணம் இந்த ஒருவர் மட்டும்தான்: பிசிசிஐக்கு கம்பீர் அறிக்கை?

By
On:
Follow Us

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றதால், அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை பெற்று, இந்தியா தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்தது. 

ஆனால், அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. இறுதியில், 3-1 என்ற கணக்கில், ஆஸ்திரேலிய அணி தொடரை வென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், வேகப்பந்து வீச்சு துறைதான் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது. 

பும்ரா தனது ஓவர்களை முடித்துவிட்டு ஓய்வுக்கு செல்லும்போது, ஆஸ்திரேலிய பேட்டர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதனால், வேறு வழியில்லாமல் பும்ராவுக்கு தொடர்ச்சியாக ஓவர்களை கொடுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.

பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்களை, 13 சராசரியில் வீழ்த்தினார். ஆனால், இவருக்கு துணையாக பந்துவீசிய முகமது சிராஜ், 5 போட்டிகளில் 20 விக்கெட்களை, 31 சராசரியில்தான் வீழ்த்தினார். 

மற்ற எந்த இந்திய பௌலரும், 7 விக்கெட்களை கூட தொடவில்லை. ஆகாஷ் தீப், ஜடேஜா, ஹர்ஷித் ராணா போன்ற முக்கிய பௌலர்களின் சராசரி, 50+ஆக தான் இருந்தது. 

ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்றால், 20 விக்கெட்களையும் எடுப்பது மிகமுக்கியம். பும்ராவை மட்டுமே நம்பி சென்றதால், இரண்டு போட்டிகளில் மட்டுமே, தலா 20 விக்கெட்களை கைப்பற்ற முடிந்தது.

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து, பிசிசிஐக்கு  தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்,அறிக்கை சமர்பித்துள்ளார்.

‘‘ஜஸ்பரீத் பும்ராவுக்கு இணையாக, தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தும் பௌலர் இல்லாததுதான், தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்’’ என்பதை, மையப்படுத்தி அறிக்கையை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில், முகமது ஷமி காயம் காரணமாக அவதிப்பட்ட காரணத்தினால்தான், அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெற முடியவில்லை. ஷமி பிட்டாக இருந்திருந்தால், இந்திய வேகப்பந்து வீச்சு துறையானது பும்ரா, ஷமி, சிராஜ் என பலமிக்கதாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

WhatsApp Channel


நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…

Follow


நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…

Subscribe

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements