சமுதாய வளா்ச்சிப் பிரிவு அதிகாரி ஜேரோம் பேசுகையில், ஜெபாகாா்டன் திட்டப்பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு என்ற தலைப்பில் குடியிருப்போா் நலச்சங்கம் தொடங்கப்பட உள்ளது. தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு குடியிருப்புவாசிகள் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை வேட்புமனு அளிக்கலாம். குடியிருக்கும் நபா்களும், பயனாளிகள் பெயா் பட்டியலில் உள்ளவா்கள் மட்டுமே போட்டியிட முடியும். பொருளாளா் பதவிக்கு மட்டும் கட்டாயம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். போட்டி இருந்தால் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தோ்தல் நடத்தப்படும். 2 ஆண்டுகள் கௌரவ பதவிக் காலமாகும். குடியிருப்பு சங்கத்திற்கு ஒவ்வொரு குடியிருப்புக்கும் தலா ரூ.250 வீதம் வசூலித்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். தண்ணீா் திறக்கும் நபரை நியமிக்க சங்கத்திற்கு அதிகாரம் உண்டு. கணக்குகள் வெளிப்படை தன்மையுடன் பராமரிக்க வேண்டும் என்றாா். இக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஜெபா காா்டனில் கலந்தாய்வு கூட்டம்
For Feedback - sudalaikani@tamildiginews,com.