Rental Wives: இந்தியாவில் ரூ.15,000க்கு வாடகை மனைவிகளாக மாறும் இளம்பெண்கள்.. எங்கு தெரியுமா?

By
On:
Follow Us

தாய்லாந்து நாட்டில் சமீபகாலமாக வாடகை மனைவி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். ஆனால், இத்தகைய நடைமுறை, பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய கொடூரம் நடப்பது மத்திய பிரதேசம் மாநிலத்தில்தான். அந்த மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் இந்த விசித்திரமான நடைமுறை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ‘தாதிச்சா பிரதா’ என்று அழைக்கப்படும் இந்த முறையில் பெண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆண்களுக்கு மனைவிகளாக வாடகைக்கு விடப்படுகிறார்கள்.

தாதிச்சா பிரதா என்பது வருடத்திற்கு ஒருமுறை, தங்கள் குடும்பத்தில் உள்ள இளம் பெண்கள், மனைவிகளை சந்தையில் வாடகைக்கு விடும் நடைமுறை. பல தசாப்தங்களாக தொடரும் இந்த நடைமுறையில், திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காத கிராமத்தின் பணக்கார ஆண்கள் வாடகை மனைவிகளை ஏலம் எடுக்கிறார்கள். கன்னித்தன்மை, உடல் தோற்றம் மற்றும் வயது போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஏலம் எடுக்கப்படுகிறது.

ஏலச் சந்தையில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட கன்னிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கை கூறுகிறது. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்கு பணம் தரப்படுகிறது. சில நேரங்களில் அழகான கன்னி பெண்கள் என்றால் ரூ.2 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே ரூ.10ல் தொடங்கி ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒப்பந்தக் காலத்தின் முடிவில், பெண்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளவும் முடியுமாம்.

பாலின விகிதங்கள், வறுமை, வரதட்சணை கொடுமை ஆகியவற்றால் வாடகை மனைவி நடைமுறை பின்பற்றப்படுவதாக சொல்லப்பட்டாலும், இந்த கொடூர நடைமுறையால் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என்கிற அச்சமூட்டும் உண்மையும் வெளிப்பட்டுள்ளது.

14 வயதில் ரூ.80,000க்கு வாடகை மனைவியாக ஏலம் விடப்பட்ட சிறுமி, தனது துணையாலும், அவரது குடும்பத்தில் உள்ள ஆண்களாலும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று பல பெண்கள், இந்த வாடகை மனைவி கலாச்சாரத்தால் ஏற்பட்ட துன்பங்களை பகிர்ந்துள்ளனர்.

Also Read | விமானத்தில் வைஃபை எவ்வாறு வேலை செய்கிறது? சிக்னல் எங்கிருந்து வருகிறது? – தெரிஞ்சுக்கலாம் வாங்க…

இக்கலாச்சாரம் குறித்து மத்திய பிரதேச காவல்துறைக்குத் தெரிந்திருந்தாலும், புகார் தர யாரும் முன்வருவதில்லை என்பதால், சட்ட ரீதியாக தடுக்கமுடியவில்லை என்ற அந்த அறிக்கை கூறுகிறது.

21ம் நூற்றாண்டிலும் பாரம்பரியம் என்கிற பெயரில் பெண்கள் மற்றும் இளம் பெண்களை வாடகை மனைவிகளாக ஏலம் விடப்படும் பழக்கம், பெண்கள் உரிமைகளில் இந்தியா முன்னேறிய போதிலும் நீடித்திருக்கும் பாலின சுரண்டலின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகிறது. பெண்களை கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியான மனிதர்களாக கருதாமல் வருமானம் ஈட்டும் சொத்துகளாக கருதுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

Rental Wives: இந்தியாவில் ரூ.15,000க்கு வாடகை மனைவிகளாக மாறும் இளம்பெண்கள்.. எங்கு தெரியுமா? – பகீர் தகவல்கள்!

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements