டிஜிட்டல் ஏழைகள்…
டிஜிட்டல் ஏழைகளாக நவீன யுகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களாக உள்ள ஸ்வீடனின் கேஷ் பப்பிள்ஸ் மிகுந்த வேதனை, அவமானத்தை சந்திப்பதாகச் சொல்கின்றனர். மேலும் அவர்கள் கோபம், விரக்தி கொண்டுள்ளனர். அன்றாடம் சந்திக்கும் அளவற்ற அவமானங்களை அவர்களை வேதனையின் உச்சத்தில் வைத்துள்ளது.
வயதான பெண் ஒருவர் அவரது பேத்தியின் பிறந்தநாளில் தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை கொண்டு சிறு பரிசுப் பொருளை வாங்க முற்பட்டுள்ளார். ஆனால் அவர் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாததால் அந்தப் பொருளை வாங்க முடியாமல் போகிறது. அந்தத் தருணத்தை அந்த மூதாட்டி வர்ணிக்கையில், “நான் அப்போது ஒரு திருடியைப் போல் உணர்ந்தேன்” எனக் கூறுகிறார்.
ஸ்வீட்ஸ் மக்கள் தொழில்நுட்பத்தை வாஞ்சையோடு, பெரிய விமர்சனங்களின்றி மிக முன்னதாகவே ஏற்றுக் கொண்டவர்கள். அப்போதே வர்த்தக உலக ஆய்வாளர்கள் 2023 மார்ச்சில் ஸ்வீடனில் பணப்பரிவர்த்தனை ஒழிந்து எல்லாம் டிஜிட்டல் மயமாகும் எனக் கணித்திருந்தனர். அது இப்போது கிட்டத்தட்ட நிறைவேறும் தருணத்தில் உள்ளது.
கடந்த 150 ஆண்டுகளில், தொழில்நுட்ப புத்தாக்கங்கள், தொழில்முனைவு போக்கு ஆகியன நாட்டை வறுமையில் இருந்து மீட்டு ஐரோப்பாவின் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
ஸ்வீடனின் ‘கேஷ்லெஸ் சமூகம்’ உருவாக வங்கிகள் மிக முக்கியக் காரணம். ஸ்விஷ் ஆப் மற்றும் எலக்ட்ரானிக் ஐடியை வங்கிகள் அறிமுகம் செய்தன. இந்த எலக்ட்ரானிக் ஐடி மூலமாகவே மருத்துவம், வேலையின்மை பலன்களைப் பெறுவதற்கான சேவைகளைப் பெற முடியும் என்ற நிலையை வங்கிகள் உருவாக்கியது. ஆகையால் வங்கி வாடிக்கையாளராக இல்லாவிட்டல் பொதுச் சேவைகளை அனுபவிக்க இயலாது.
கொரோனா பெருந்தொற்றின்போது பணத்தை பயன்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவும் என்ற அச்சத்தால் கேஷ்லெஸ் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்தது.
இவையெல்லாம் சேர்ந்து ஸ்வீடன் சமூகத்தை டிஜிட்டல் பணம் தான் நல்லது, ரொக்கப் பணம் அழுக்கானது, குற்றத் தொடர்புடையது என்பன போல் ஒரு மாயையை உருவாக்கிவிட்டது. அதனாலேயே இன்னமும் ரொக்கப் பணத்தை நம்பியிருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
ஸ்வீடனில் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் ரொக்கப் பணம் பயன்பாடு வழக்கொழிந்துவிடும். ஆனால் வறுமையினால் டிஜிட்டம் பரிவர்த்தனை செய்ய முடியாதவர்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டோரும் கூட இந்த கேஷ் பப்பிள்ஸ் குழுமத்தில் உள்ளடங்குவர்.
இது வெறும் சமூகப் பிரச்னை மட்டுமல்ல, சமூகத்தில் ஒரு சாராரின் உணர்வுப் போராட்டம். ஒரு பிரிவினர் தனித்துவிடப்பட்டவர்களாக உணர்கின்றனர். இதை ஒருவர், “வறுமையை விட மனிதர்கள் மாயமாகிவிட்டதாக உணர்கிறேன். நான் எந்திரனைப் போல் இருக்கிறேன். இங்கே கிளிக் செய்யவும், அங்கே கிளிக் செய்யவும் என்ற பதாகைகள், டிஜிட்டைசேஷன் மக்களை தனிமைப்படுத்திவிட்டது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs