திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் விற்பனை

By
On:
Follow Us

Last Updated:

திருப்பதியில் போலி டிக்கெட்டுகளை போட்டோஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.

News18

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் கும்பலை திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் கூட்டு சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானுபிரகாஷ் ஆகியோர் பக்தர்கள் கொண்டு செல்லும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை, போலியாக போட்டோஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அவ்வாறு கடந்த 14ஆம் தேதி பக்தர்கள் சிலரிடம் இவர்கள் கைவரிசை காட்டியபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பக்தர்களின் டிக்கெட்டுகளை வாங்கி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் இருப்பது போலி டிக்கெட்டுகள் என்பதும், அந்த டிக்கெட்டுகளை மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிரகாஷ் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும், அவ்வாறு வருபவர்களின் டிக்கெட்டுகளை லட்சுமிபதி ஸ்கேன் செய்யாமல் அனுப்பியதும் தெரியவந்தது.

இதையும் படிக்க: ரூஃப்டாப் சூரிய மின்சக்தி… 2 கூடுதல் கட்டண முறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்…! 

இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியர் லட்சுமிபதி, மணிகண்டா, ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் சசி, பானு பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலி தரிசன டிக்கெட்டுகள் மூலம் இவர்கள் 19 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements