Last Updated:
சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வரும் இந்த வந்தாரா வன உயிரின மறுவாழ்வு மையம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது.
யானை பாகனை கொடூரமாக தாக்கிய யானை உள்பட 2 யானைகள் ஆனந்த் அம்பானியின் வந்தாரா பராமரிப்பு மையத்தில் இணைந்துள்ளன.
இந்த 2 யானைகளும் கொல்கத்தா அருகே உள்ள மாயாபூர் இஸ்கான் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்தவை. 18 வயதான விஷ்ணு பிரியா மற்றும் 26 வயதாகும் லட்சுமி பிரியா என்ற 2 பெண் யானைகள் இஸ்கான் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்தன.
இவற்றில் விஷ்ணு பிரியா கடந்த ஏப்ரல் மாதம் யானை பாகனை கொடூரமாக தாக்கியது. அப்போது இதனை பராமரிக்கும் முடிவை எடுத்த ஆனந்த் அம்பானியின் வந்தாரா வன உயிரினங்கள் மறுவாழ்வு மையம், திரிபுரா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வந்தாராவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் 2 யானைகளும் தற்போது வந்தாரா வன உயிரினங்கள் மறுவாழ்வு மையத்திற்கு வந்துள்ளன.
மாயாப்பூர் இஸ்கான் கோவிலில் லட்சுமி பிரியா கடந்த 2007 முதல் மற்றும் விஷ்ணு பிரியா யானை 2010 முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை பீட்டா நிறுவனம் கோயிலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வந்தாரா இந்த 2 யானைகளையும் பராமரிக்க தொடங்கி இருக்கிறது. இங்கு அவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்படும் என வந்தாரா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நூற்றுக்கணக்கான உயிரினங்களை வந்தாரா பராமரித்து வரும் நிலையில் மேலும் 2 யானைகள் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் மோதி காட்டி என்ற கிராமத்தில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் வந்தாரா வன உயிரின மறுவாழ்வு மையம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் தலைமையின் கீழ் இந்த வந்தாரா நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு விலங்குகளுக்கு அரும்பணியாற்றி வருகிறது. இங்கே உலக தரம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் பராமரிப்பாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இதையும் படிங்க – ரூஃப்டாப் சூரிய மின்சக்தி… 2 கூடுதல் கட்டண முறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்…!
சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வரும் இந்த வந்தாரா வன உயிரின மறுவாழ்வு மையம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள், உலக கோடீஸ்வரர்கள், விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என ஏராளமானோர் வந்தாராவை பார்வையிட்டனர். யாரும் நினைத்துப் பார்த்திட கூட முடியாத சேவையை விலங்குகளுக்கு வந்தாரா செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
January 19, 2025 6:39 PM IST