திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து விளக்கம் கேட்கும் முடிவு.. பின்வாங்கிய மத்திய உள்துறை

By
On:
Follow Us

Last Updated:

மத்திய உள்துறை அமைச்சகம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது.

திருப்பதி கோயில்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மத்திய உள்துறை பின்வாங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் சமீபத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட 6 பேர் இறப்பு, பலர் படுகாயம், லட்டு கவுண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான விரும்பத்தகாத நடப்புகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும் இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய முடிவிலிருந்து திடீரென்று பின்வாங்கிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தங்களுடைய முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் மூலம் தகவல் அளித்துள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மத்தியிலும் அதே கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென்று எடுத்த இந்த முடிவு ஆந்திர அளவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேசி அவர்களுடைய முடிவை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து விளக்கம் கேட்கும் முடிவு.. பின்வாங்கிய மத்திய உள்துறை – என்ன காரணம்?

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements