January 20, 20259:43 AM IST
Tamil Live Breaking News: பரந்தூர் மக்களுடன் கலந்துரையாட உள்ள விஜய்!
பரந்தூர் சென்று கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது விஜய் சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர். வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள், தொண்டர்களுக்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.