கேரளா கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை! இந்தியாவில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட பெண் யார் தெரியுமா?

By
On:
Follow Us

Last Updated:

முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு 35 வயதான பினிதா என்ற பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

News18

காதலனை விஷம் வைத்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 24 வயது கிரீஷ்மாவுக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதுவரை பெண்கள் எத்தனை பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

கேரளாவின் கொல்லத்தில் நடந்த விதுகுமாரன் கொலை வழக்கில் முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு 35 வயதான பினிதா என்ற பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவில் ஒரு பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும். அந்த தண்டனை பின்னர், உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதன்பிறகு, விழிஞ்சம் சாந்தகுமாரி என்ற மூதாட்டியை நகைகளுக்காக கொலை செய்த வழக்கில் ரஃபீகா பீவி என்பவருக்கும் அவரது மகன் மற்றும் நண்பருக்கும் கடந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நெய்யாற்றின்கரா கூடுதல் அமர்வு நீதிபதி பஷீர்தான் தற்போது, கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரிஷ்மாவுக்கும் மரண தண்டனை விதித்துள்ளார்.

கிரீஷ்மாவுடன் சேர்ந்து கேரளாவில் மரண தண்டனை பெற்ற கைதிகள் 40 பேர் உள்ளனர். அம்மாநிலத்தில் 24 வயது இளம் பெண்ணிற்கு மரணத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு சீரியல் கொலைகாரரான முத்துக்குட்டி சந்திரன் உள்பட 3 ஆண்கள் கேரளாவில் தூக்கிலிடப்பட்டனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தொடர் கொலைகளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், சேலம் சிறையில் 1995 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

நாடு முழுவதும் சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 175 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடைசியாக, நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகேஷ் சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா ஆகிய 3 பேருக்கும் திகார் சிறையில் 2020 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக 3 பெண்களை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரத்தன் பாய் ஜெய் என்ற பெண்ணிற்கு 1955 ஆம் ஆண்டு திகார் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுதான் முதலும் கடைசியுமாக ஒரு பெண்ணிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை ஆகும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி உள்பட பல பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் அவர்களின் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரளா கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை! இந்தியாவில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட பெண் யார் தெரியுமா?

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements