Last Updated:
தனியார் ஆலையில் இருந்து யானைகளுடன் மீட்கப்பட்ட யானை பாகன்களுக்கு வந்தாரா வன உயிர் மறுவாழ்வு மையத்தில் பணி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் தனியார் மர ஆலையில் இருந்து 20 யானைகள் மீட்கப்பட்ட நிலையில் அவை விரைவில் அனந்த் அம்பானியின் வந்தாரா யானைகள் பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட உள்ளன.
உச்ச நீதிமன்றம் மற்றும் திரிபுரா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார கமிட்டி மூலம் அருணாசல பிரதேசத்தில் தனியார் மர ஆலையில் இருந்து 20 யானைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீட்கப்பட்ட 20 யானைகளும் விரைவில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானியின் வன உயிரின மறுவாழ்வு மையமான வந்தாராவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆண் யானைகள், 8 பெண் யானைகளும் அடங்கும்.
மேலும், தனியார் ஆலையில் இருந்து யானைகளுடன் மீட்கப்பட்ட யானை பாகன்களுக்கு வந்தாரா வன உயிர் மறுவாழ்வு மையத்தில் பணி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் மோதி காட்டி என்ற கிராமத்தில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் வந்தாரா வன உயிரின மறுவாழ்வு மையம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் தலைமையின் கீழ் இந்த வந்தாரா நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு விலங்குகளுக்கு அரும்பணியாற்றி வருகிறது. இங்கே உலக தரம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் பராமரிப்பாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.
சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வரும் இந்த வந்தாரா வன உயிரின மறுவாழ்வு மையம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது.
சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள், உலக கோடீஸ்வரர்கள், விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என ஏராளமானோர் வந்தாராவை பார்வையிட்டனர். யாரும் நினைத்துப் பார்த்திட கூட முடியாத சேவையை விலங்குகளுக்கு வந்தாரா செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
January 21, 2025 5:28 PM IST