Last Updated:
கொல்கத்தாவில் பொய்யான கால் சென்டர் நடத்தி மோசடியை நடத்திய 19 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் செயல்பட்ட பொய்யான கால் சென்டர். இந்த மோசடியை நடத்திய 19 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பாலிகங்கேயில் உள்ள முல்லன் சாலையில் கொல்கத்தா போலீசார் சோதனை நடத்தியதில் இந்த 19 பேரும் வசமாக சிக்கினர். இவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய பல மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலியாக நடத்தி வந்த கால் செண்டரும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தங்களை கபார், நோர்டன் ஆன்டி வைரஸ் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்கள் என அடையாளப்படுத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினரின் கணினி மற்றும் லேப்டாப்களில் மென்பொருளை நிறுவி அல்லது புதுப்பிப்பு செய்கிறோம் எனக் கூறி ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடியை கடந்த 1-2 வருடங்களாக செய்து வருகிறார்கள்.
நம்பத்தகுந்த ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், கொல்கத்தா காவல்துறை முல்லன் ரோடு, பிஎஸ்-பல்லிகஞ்ச், கொல்கத்தா-20 இல் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் சோதனை நடத்தியது. அந்த குடியிருப்பில் இருந்து சட்டவிரோதமாக கால் சென்டர் நடத்தி வந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையின் போது அவர்களிடமிருந்து பல மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ரூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடி கும்பல் பொதுவாக நார்டன் ஆன்டி வைரஸ் (Norton Anti Virus) மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களாக தங்களை காட்டிக்கொண்டு, வெளிநாட்டு நபர்களின் சாதனங்களில் மென்பொருளை நிறுவுவது/புதுப்பிப்பது போல் ஏமாறுகிறார்கள்.
முக்கியமாக அமெரிக்க டெஸ்க்டாப் போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி, அவர்களின் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை எங்கிருந்து யார் வேண்டுமானாலும் இயக்கும் வகையில் தொலைநிலை அணுகலைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். பின்னர் அவர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு 30-200 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு அட்டைகளை வாங்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். பின்னர் அவை பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்டு தங்களின் சொந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்கிறார்கள்.
ஏஆர்எஸ் டிடியின் புகாரின் அடிப்படையில் ஏற்கனவே இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படி இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்?
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் முதன்மையாக அமெரிக்க குடிமக்களை குறிவைக்கின்றர். ஒரு சிறப்பு வகை ஆன்டி வைரஸை உங்கள் கணினியில் நிறுவங்கள் என அவர்களிடம் ஆசை வார்த்தை கூறுகிறார்கள். அதன்பிறகு பல்வேறு ஆப்ஸ் மூலம் அவர்களின் சிஸ்டத்தின் கட்டுப்பாட்டை இவர்கள் வசம் வரும்படி இயக்குகிறார்கள்.
மோசடி செய்பவர்கள் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரிசு கூப்பன்களை வாங்கும்படி கடைக்காரர்களை கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பணத்தையும் இக்குழுவின் தலைவர் பறித்துக் கொண்டுள்ளார். இந்த முறை போலீஸ் இக்குழுவின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள்? இதோடு தொடர்புடையவர்கள் யார்? இக்குழுவின் தலைவர் யார்? ஆகியவற்றை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 22, 2025 1:41 PM IST