காத்தாடி திருவிழா… ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் வருமானம் தரும் செழிப்பான பிசினஸ்..!

By
On:
Follow Us

Last Updated:

வாரங்கல் நகரில் காத்தாடி விழா தொடங்கிவிட்ட நிலையில் வண்ணமயமான காத்தாடிகள் அங்கிருக்கும் உள்ளூர் சந்தைகளில் இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன.

காத்தாடி திருவிழா

சங்கராந்தி பண்டிகை வரும் போது, ​​வானத்தில் பட்டங்கள் ஏராளமாக பறக்கும். ஐந்து பட்டங்களை ஒரே நூலில் கட்டி வானத்தில் பறக்க விடப்படுவதை பார்க்கும் எவரும் தாங்களே வானத்தில் பறப்பது போல் உற்சாகமாக உணர்வார்கள்.

இளைஞர்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் பட்டங்களை பறக்க விடுகிறார்கள். குறிப்பாக சங்கராந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல கிராமங்களிலும் நகரங்களிலும் காத்தாடி விழா தொடங்கி விடும். காத்தாடி விழா நெருங்க நெருங்க சத்தம் அதிகமாக இருக்கும். குழந்தைகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் காத்தாடிகளை பறக்கவிடும் காட்சியை சகஜமாக பார்க்க முடியும்.

வாரங்கல் நகரில் காத்தாடி விழா தொடங்கிவிட்ட நிலையில் வண்ணமயமான காத்தாடிகள் அங்கிருக்கும் உள்ளூர் சந்தைகளில் இருக்கும் கடைகளில் கிடைக்கின்றன. காத்தாடி திருவிழா சீசன் என்பதால் நகரத்தில் உள்ள பெரும்பாலான காத்தாடி கடைகளும் வியாபாரத்தில் படுமும்முரமாய் ஈடுபட்டு வருகின்றன. காத்தாடி கடைகளில் கண்களை கவரும் வகையில் பல வண்ணமயமான காத்தாடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

குறிப்பாக வாரங்கல் நகரின் யெல்லம் பஜார் (Yellam Bazaar) பகுதியில் உள்ள சூரஜ் படங்கர் ஸ்டாலில் உள்ள கலர்கலரான காத்தடிகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இந்த கடையின் மேலாளர் சந்தீப் கூறுகையில், இந்த கடையை கடந்த 40 வருடங்களாக நடத்தி வருகிறோம். எங்களிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் காத்தாடிகள் கிடைக்கின்றன. அனைத்து வகையான சிறப்பு காத்தாடிகளும் எங்களது கடைகளில் கிடைக்கின்றன.

10 வகையான காத்தாடிகள் இங்கே உள்ளன. இவற்றின் விலைகள் ரூ.5 முதல் ரூ. 40 வரை தொடங்குகிறது. அதே போல காத்தாடிகளை சிறப்பாக பறக்க வைக்கும் வகையில் பல வகையான நூல்கள் இங்கே உள்ளன. இவற்றில் பருத்தி நூல், மாஞ்சா, ஹைதராபாத் ஸ்பெஷல், மோதிலால் மாஞ்சா என பல வகைகள் உள்ளன என்றார்.

TN Weather Update | தமிழகத்தில் 28ஆம் தேதி வரை ‘இப்படித்தான்’ இருக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!

அதே நேரம் எண்களின் கடைக்கு வந்து சீன மாஞ்சா கேட்பவர்களுக்கு நாங்கள் சில விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சீன மாஞ்சா எங்களிடம் கிடைக்காது, எங்களுக்கு அது தேவையில்லை என்று கடையினுள் பலகைகளை வைத்துள்ளோம். சீன மாஞ்சா நூல்களால் ஏற்படும் தீங்குகள் குடித்து நாங்கள் அவர்களுக்கு விளக்கி வருகிறோம்.

அதே போல் மகாராஷ்டிராவிலிருந்து பிளாஸ்டிக் பட்டங்களையும், ஹைதராபாத்திலிருந்து காகித பட்டங்களையும் இங்கே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். எங்களிடமிருந்து அதிக அளவில் பட்டங்கள் வாங்குபவர்களுக்காக சிறப்பு தள்ளுபடியும் வழங்குகிறோம்.சமீப காலமாக, பெரும்பாலான இளைஞர்கள் மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதால் காத்தாடிகளின் புகழ் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்து உள்ளார். ஸ்மார்ட் ஃபோனே கதி என்று கிடப்பதால் இளைஞர்கள் காத்தாடிகளை பறக்கவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் எங்கள் வியாபாரம் முன்பை போல் இல்லை. தவிர காத்தடிகளின் விலை அதிகரிப்பால், அவற்றை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. முன்பு போல காத்தடிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது சில்லறையாக மட்டுமே விற்பனை செய்கிறார்கள். தினமும் 40 முதல் 50 வாடிக்கையாளர்கள் வந்து அவற்றை வாங்குகிறார்கள். தற்போது, ​​தினமும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காத்தடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements