கூடாரத்திற்குள் திடீரென நுழையும் ஆண்கள்.. தட்டி கேட்ட சகோதர் மீது தாக்குதல்

By
On:
Follow Us

Last Updated:

மோனலிசாவை சுதந்திரமாக சுற்ற விடாமல். சுற்றி வளைத்து செல்பி எடுத்து டார்ச்சர் செய்தனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மோனலிசா கருப்பு நிற மாஸ்க்கை அணிய தொடங்கினார்.

News18

உத்திர பிரதேசத்தின் கும்ப மேளாவில் கோடிகணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் மோனாலிசா. வசிகர கண்கள், ரசிக்கவைக்கும் தோற்றத்தால் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகி உள்ளார். அதுவே தற்போது அவருக்கு மிகப்பிரச்னையாக உருவெடுத்துள்ளது. யூடுயூபர், மீடியாக்கள் என பலர் அவரை போட்டோ எடுக்கவும், பேட்டி எடுக்கவும் போட்டி போட்டு படையெடுத்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே, மகா கும்பமேளா விழாவில் பாசி, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றைத் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விற்று வந்தார். கும்பமேளாவில் கூட்டம் கூடும், நல்ல வருமானம் கிடைக்கும் என நினைத்திருந்த மோனாலிசாவிற்கு கேட்டது ஒன்று. ஆனால் கிடைத்தது ஒன்று.

பாபாக்கள், அகோரிகளுக்கு நடுவே மோனாலிசா பாசி மாலைகள் விற்றதை யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து அப்லோடு செய்துள்ளார். யார் இவர்? எங்கிருக்கிறார்? என பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கினர். கையில் கேமிராவுடன் புறப்பட்ட யூடியூபர்கள், போட்டோகிராபர்கள் கும்பமேளாவில் இருந்த மோனாலிசாவை இன்டர்வியூ எடுத்தும், வீடியோ பதிவு செய்து அப்லோடு செய்து வந்தனர்.

அதன் விளைவாக தன்னை தேடி பலரும் அலைந்ததால் புன்னகையில் மூழ்கிய மோனாலிசாவிற்கு நாளடைவில் அதுவே ஆபத்தாக மாறியது. மோனலிசாவை சுதந்திரமாக சுற்ற விடாமல். சுற்றி வளைத்து செல்பி எடுத்து டார்ச்சர் செய்தனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மோனலிசா கருப்பு நிற மாஸ்க்கை அணிய தொடங்கினார். இருப்பினும் அவரது கண்கள் அவரை காட்டி கொடுக்காமல் மறைத்து வைக்க, தவறிவிட்டது.

மோனாலிசா தங்கியிருக்கும் கூடாரத்திற்கும் பேட்டி, போட்டோ எடுக்க குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தனது கூடாரத்தில் திடீரென ஆண்கள் நுழைந்து தொல்லை கொடுத்ததாக மோனாலிசா தெரிவித்துள்ளார். “எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என்னை காப்பாற்ற யாரும் இங்கு இல்லை. எங்கள் கூடாரத்தில் மின்சார வசதி கூட இல்லை. சிலர் அத்துமீறி உள்ளே நுழைகின்றனர். என் தந்தை அவர்களை தடுத்து அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி உள்ளே வரலாம் என்றார்.

ஆனால் அதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. என் அனுமதி இல்லாமல் என்னை போட்டோ எடுக்கின்றனர். கோபத்தில் என் சகோதரர் அவர்களின் போனை வாங்கி என்னுடைய புகைப்படங்களை டெலிட் செய்ய முயற்சித்தார். ஆனால் சுமார் 9 பேர் கூட்டாக சேர்ந்து என் சகோதரர் மீது தாக்குதல் நடத்தினார்கள்“ என்று வேதனை உடன் தெரிவித்துள்ளார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements