நாயை வைத்து ஒத்திகை.. மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த கணவன்

By
On:
Follow Us

Last Updated:

மாதவியின் பெற்றோர் போன் செய்த போது அவர் பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் மகளை காணவில்லை என மீர்பேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Telangana Murder

தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை ஏரியில் வீசிய கொடூரம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் வெங்கட மாதவி என்பவரை திருமணம் செய்து 13 ஆண்டுகளாக தெலங்கானாவின் மேட்சலில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி, அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய குருமூர்த்தி, கடந்த 16 ஆம் தேதி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். மாதவியின் பெற்றோர் போன் செய்த போது அவர் பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் மகளை காணவில்லை என மீர்பேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக குருமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன.

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை வெட்டி துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என கற்றதாகவும், சோதனை முயற்சியாக தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாகவும் கூறியுள்ளார்.

Also Read | Saif Ali Khan | தாய்க்கு நேர்ந்த சோகம்.. சைஃப் அலிகான் வீட்டில் திருட சென்றது இதற்காக தான்.. கைதான ஷரிஃபுல் பகீர் வாக்குமூலம்!

இதே பாணியில் தனது மனைவியின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பொடிப்பொடியாக்கி, கால்வாயில் கரைத்ததோடு, மீதம் உள்ள எலும்புகளை ஏரியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements