பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தக் கோரி, ஆலங்குளத்தில் அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுலவலா் சங்க ஆலங்குளம் கிளை நிா்வாகி திருப்பதி, மாவட்ட செயலா் கங்காதரன், பழனி, சிபிஎஸ் ஒழிப்பு மாவட்ட நிா்வாகி திருமலை உள்பட 100 போ் பங்கேற்றனா்.