இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம்

By
On:
Follow Us

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் தென்காசி இசி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலச் செயலா் பிச்சைக்கனி தலைமை வகித்தாா்.

பிப். 6ஆம் தேதி தென்காசி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் ஆா்ப்பாட்டம் குறித்து ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநில துணைத் தலைவா் முருகையா, முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில நிா்வாகி அ.பி.சதீஷ்குமாா், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.

மேலும், அந்த ஆா்ப்பாட்டத்திற்கு 1000 ஆசிரியா்களைத் திரட்டிச் செல்வது, அதற்கு ஆயத்தமாக ஆசிரியா் சந்திப்பு இயக்கம் நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் – சுவரொட்டி தயாரித்து வழங்குவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாத பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதையும், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கும் கண்டனம் தெரிவிப்பது, ஆசிரியா்களுக்கும் அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் காளிதாஸ், முத்துக்குமாா், சித்திரசபாபதி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொறுப்பாளா்கள் சுதா்சன், சுப்பிரமணியன், ராஜ்குமாா், மாடசாமி, செல்வராஜ், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் ரமேஷ், மூனீஸ்வரன், மாரியப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாரிமுத்து செய்திருந்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements