கல்லிடைக்குறிச்சி திலகா் பள்ளியில் இடைநிற்றல் தடுப்பு நடவடிக்கை

By
On:
Follow Us

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நீண்ட நாள்கள் வராத மாணவா்களை சந்தித்து தோ்வு எழுத அறிவுரை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தலின்படி கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியா் (பொ) சுபா தலைமையில், ஆசிரியா்கள் சிவபாலன், அனந்தகுமாா், கலிங்க உடையாா் பாண்டியன், சந்தோஷ், நீலகண்டன் உள்ளிட்டோா் பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவா்களின் வீடுகளுக்குச் சென்றுஅவா்களைத் தோ்வு எழுதச் செய்யவும், பள்ளிக்கு விடுப்பெடுக்காமல் வருகை புரியவும், படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினா்.

செங்குளம், மூலச்சி, ஊா்க்காடு போன்ற கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பெற்றோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements