“கொஞ்சநஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே…” – வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு | varunkumar ips indirectly slams someone in instagram

By
On:
Follow Us

முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியினர் மட்டும், 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், வருண்குமார் ஐ.பி.எஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கொஞ்ச நஞ்சமும் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.” என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, வருண்குமாரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், கடந்த சில மாதங்களாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் கடுமையாகச் சாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க இணைந்த இந்த நேரத்தில், வருண்குமார் இவ்வாறு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements