திசையன்விளை செல்வமருதூா் அடைக்கலம் காத்த விநாயகா் கோயில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் கும்ப கலசம் கோயிலைச் சுற்றி கொண்டு வரப்பட்டு, விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அடைக்கலம் காத்த விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.