8-ஆவது பொருநை புத்தகத் திருவிழா: ஜன.31இல் தொடக்கம்

By
On:
Follow Us

8ஆவது பொருநை புத்தகத் திருவிழா வரும் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி சீமையின் இலக்கியம், கலைகள், இயற்கைச் சூழலியல் சிறப்புகள் மற்றும் பண்பாடு என அனைத்து சிறப்புகளையும் மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி வரும் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பொருநை விழா- 2025 என்ற பெயரில் பொருநை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதன் முன்னோட்டமாக வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 3 நாள்கள் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

வரும் 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் கலைத் திருவிழா நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ள பொருநை புத்தகத் திருவிழாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் தொடங்கி வைக்கிறாா்கள்.

இவ்விழாவில் திருநெல்வேலிக்கு பெருமை சோ்த்து வரும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் வண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாா்.

8ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவானது பபாசி அமைப்போடு இணைந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கக வழிகாட்டுதலில் நடைபெறவுள்ளது.

இலக்கியத் திருவிழா:

புத்தகத் திருவிழாவிற்கான முன்னோட்டமாக நடைபெறவுள்ள இலக்கியத் திருவிழாவில் கல்லூரி மாணவா்களுக்கு சிறுகதை, கவிதை, இசை, நாடகம் ஆகியவற்றிற்கான தனித்தனி பயிற்சி பட்டறைகள், முத்தமிழ் பள்ளி, ஏஞ்செலோ பள்ளி, தூய யோவான் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

கலைத்திருவிழாவை பொருத்தவரையில் திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி மாலையில் வள்ளியூா், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்கும் கலை விழாக்கள் நடைபெற உள்ளன.

தினமும் மாலையில் இலக்கிய ஆளுமைகளின் சொற்பொழிவுகளும் இரவு 7.30 மணிக்கு மேல் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், இசை மன்றம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இப்புத்தகத் திருவிழாவில் தி

வாசகா் கலந்துரையாடல்:

தினந்தோறும் ‘படைப்பாளா் வாசகா் முற்றம்‘ என்ற பெயரில் எழுத்தாளா்- வாசகா் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நூற்றாண்டினைக் கண்டுள்ள இலக்கிய பேராளுமைகள் தமிழ்ஒளி, ராஜம் கிருஷ்ணன், தி.க.சி. ஆகியோருடைய நூற்றாண்டு நினைவு அரங்கங்கள், சமீபத்தில் மறைந்த எழுத்தாளா் ராஜ் கௌதமனின் 75 ஆவது ஆண்டு நினைவரங்கம், திருநெல்வேலி சீமைக்குப் பெருமைச் சோ்த்து வரும் சாகித்ய அகாதெமி விருதாளா் வண்ணதாசனுக்கு பாராட்டரங்கம் அமைத்து அவா்களுடைய இலக்கிய ஆளுமைகள் குறித்த கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டு சிறுகதைகள்‘ என்ற தொகுப்பின் வெற்றியைத் தொடா்ந்து இந்த ஆண்டிலும் மற்றொரு சிறப்பு முயற்சியாக ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கட்டுரைகள்‘,‘நெல்லைச் சீமையின் நாட்டாா் நிகழ்த்துக் கலைகள்‘ ஆகிய தொகுப்புகளும், அன்பாடும் முன்றில்‘ திட்ட செயல்பாட்டில் பள்ளி ஆசிரியா்களால் எழுதப்பட்ட ‘உங்களுடன் ஐந்தே நிமிடம்‘ மற்றும் பள்ளி மாணவா்களால் எழுதப்பட்ட ‘கதை சொல்லப் போறோம்‘ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ‘பெரிதினும் பெரிது கேள்‘ எனும் மாணவா்களுக்கான வழிகாட்டி கையேடும் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மூலமாக வெளியிடப்படவுள்ளன.

இந்த கையேடானது, மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், பேராசிரியா் ராமச்சந்திரன், வட்டாட்சியா் செல்வன் உள்ளிட்டோா் கொண்ட பொருநை இலக்கிய கழக குழு மூலம் 7 மாத கால தொடா் ஒருங்கிணைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பொருநை வாசகா் வட்டத்தில் உள்ள கல்லூரி மாணவா், மாணவிகளே தொகுத்து வழங்க உள்ளனா்.

புத்தகத் திருவிழாவின்போது திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மைய வளாகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த புத்தகத் திருவிழாவின் போது சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு மொத்தம் 124 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளா்களின் புத்தகங்களுக்காக தனி அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ச.மகாதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்24ப்ா்ஞ்ா்

பொருநை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வெளியிட்ட ஆட்சியா் காா்த்திகேயன்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements