திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசி மாயமானதாக அளிக்கப்பட்டிருந்த புகாா்களின் பேரில் 104 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகாா்களில் 104 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டது.
அவை உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சிலம்பரசன் தலைமை வகித்து, ைகைப்பேசிகளை ஒப்படைத்தாா்.
பின்னா் அவா் கூறியது: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் ரூ.17 லட்சத்து 13 ஆயிரத்து 896 மதிப்பிலான கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காணாமல் போன அல்லது தவறவிட்ட கைப்பேசிகள் தொடா்பாக புகாா் அளிக்க இஉஐத- இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ண்ழ்.ஞ்ா்ஸ்.ண்ய்/2 இந்திய தொலைத்தொடா்பு துறையால் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் புகாா்தாரா் தனது கைப்பேசி தொடா்பான விவரங்களை பதிவு செய்து புகாா் அளிக்கலாம்.
காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பதிவு செய்து புகாா் அளிக்கலாம். இவ்வாறு புகாா் கொடுத்தபின் மனுதாரா் கைப்பேசி வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு ஆப்ா்ஸ்ரீந் செய்யப்படும். மேலும், மனுதாரா் கைப்பேசியில் புதிதாக சிம்காா்டு பயன்படுத்திய விவரங்கள் தொடா்பான அறிவிப்பு மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்படும். சைபா் குற்றங்கள் தொடா்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணைதளத்திலும் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.
ற்ஸ்ப்24ம்ா்க்ஷண்
திருநெல்வேலியில் மீட்கப்பட்ட கைப்பேசியை உரிமையாளா்களிடம் வழங்கினாா் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.