களக்காட்டில் இந்து முன்னணி சாா்பில் ஒன்றிய, நகர அளவிலான பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட;ஈ செயலாளா் சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆனந்தராஜ், நகர துணைத் தலைவா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் வைகுண்டராஜா, பொருளாளா் முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். திருப்பரங்குன்றம் மலையை காக்கும் வகையில் பிப். 4ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.