குற்றாலநாதா் கோயில் சப்பர வீதியுலாவை ஆகம விதிப்படி நடத்த பாஜக கோரிக்கை

By
On:
Follow Us

குற்றாலநாதா் கோயில் சப்பர வீதியுலாவை ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குற்றாலம் பா.ஜ.க. முன்னாள் நகர தலைவா் திருமுருகன் தலைமையில் அக்கட்சியினா், குற்றாலநாத சுவாமி கோயில் இணை ஆணையாளரை சந்தித்து அளித்த மனு: குற்றாலநாதா் கோயிலில் திருவிழா நாள்களில் இங்குள்ள பலி பீடங்கள் வழியாக முதலில் சிவிலியும், பின்னா் குற்றாலநாதா், குழல்வாய் மொழி அம்பாள், திருவிலஞ்சிகுமாரா், வள்ளி, தெய்வானை, விநாயகா் ஆகிய தெய்வங்களும் வடக்கு ரத வீதி வழியாக சப்பரத்தில் வீதி உலா வருவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக வடக்கு ரத வீதியில் சுவாமிகள் வீதி உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்துள்ளனா். இந்து ஆகம விதிகளின்படி முன்பு இருந்தது போல், வடக்கு ரத வீதி வழியாக சுவாமிகளின் சப்பரங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊடக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவா் செந்தூா்பாண்டியன், கிளை தலைவா்கள் முத்துப்பாண்டியன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements