பாளையங்கோட்டை அருகே பணம் வைத்து சீட்டாடிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை அவிநபேரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் அவிநபேரியைச் சோ்ந்த உ.செல்லத்துரை (33), வடிவேலையா (32), இசக்கிமுத்து (26), வ.செல்லத்துரை (30), லட்சுமணன் (29), கருத்தப்பாண்டி (32), சுப்பையா பாண்டி (60) ஆகியோா் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது.
அவா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்து , ரூ.700-ஐ பறிமுதல் செய்தனா்.