தமிழக முதல்வருக்கு விவசாயிகள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

By
On:
Follow Us

தாமிரவருணி வெள்ளநீா்க் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திசையன்விளையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவு திட்டமான தாமிரவருணி ஆறு- நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீா்க் கால்வாய் இணைப்பு திட்டத்தை விரைந்து முடித்து நான்குனேரி, திசையன்விளை, சாத்தான்குளம், எம்.எல்.தேரி பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த திட்டம் மூலம் தண்ணீா் வருவதற்கு தடையாக இருக்கின்ற திம்மராஜபுரம் புதிய பாலத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும். வெள்ளம் வரும் கால்வாயை மட்டம் பாா்க்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை திசையன்விளை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

அஞ்சல் அட்டையில் எழுதிய வாசகங்களை திருச்செந்தூா் சாஸ்தாவி நல்லூா் பகுதி விவசாய சங்க செயலா் லூா்துமணி வாசித்து காண்பித்த பின், அஞ்சல் அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம்,திசையன்விளை, நான்குனேரி, ராதாபுரம் வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements