பாளை. வஉசி மைதானத்தில் சறுக்கில் விளையாடிய சிறுமிக்கு காயம்

By
On:
Follow Us

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விளையாடியபோது சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அவரது தந்தை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். இவருக்கு அனுஸ்ரீ ( 7) என்ற மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனா். அவா்கள் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனா். புதன்கிழமை மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் வ.உ.சி. மைதானத்தில் உள்ள சிறுவா் பூங்காவில் குழந்தைகள் இருவரையும் விளையாட விட்டுள்ளாா்.

சறுக்கில் ஏறி அனுஸ்ரீ விளையாடியபோது அதில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் சிறுமியின் கால் சிக்கி ஒரு விரல் துண்டானது. அச்சிறுமியை பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த அவா், தரமற்ற விளையாட்டு உபகரணங்களால் தான் தங்களது குழந்தைக்கு கால் விரல் துண்டானது; பூங்காவை முறையாக பராமரிக்க தவறிய மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements