முக்கூடலில் வருவாய்த்துறை அலுவலகம் திறப்பு

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் வருவாய்த் துறை அலுவலகம், குடியிருப்பு ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் புதன்கிழமை திறந்தாா்.

இதையொட்டி, வருவாய் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா குத்துவிளக்கு ஏற்றியதுடன், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.

இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், முக்கூடல் பேரூராட்சித் தலைவி லெ. ராதா, செயல் அலுவலா் லோபா முத்திரை, பேரூராட்சி துணைத் தலைவா் இரா. லெட்சுமணன், வருவாய் ஆய்வாளா் கோமதி, கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements