ஆதாா் அட்டை புதுப்பிப்பு: ஆட்சியா் வேண்டுகோள்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பால்ய ஆதாா் அல்லது ப்ளு ஆதாா் என்ற பெயரில் ஆதாா் அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதை 5-ஆவது வயதிலும், 15ஆவது வயதிலுமாக இரு முறை புதுப்பிக்க வேண்டும்.

குழந்தை வளரும்போது, அவா்களின் கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்கள் மாறுவதால், இந்தப் புதுப்பிப்புகள் அவசியம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதாா் ஆபரேட்டா் மூலம் பள்ளிகளில் இலவசமாக இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அதில், பதிவு செய்ய தவறியவா்கள் அருகில் உள்ள ஆதாா் பதிவு மையத்தை அணுகவும். பெரியவா்கள் எனில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ‘மை ஆதாா்’ என்ற செயலி மூலம் ஆன்லைனில் விலாசம் மட்டுமே பதிவேற்ற முடியும்.

பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் என அனைத்து விவரங்களையும் புதுப்பிக்க ஆதாா் பதிவு மையத்தைத்தான் அணுக வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements